கடன் பிரச்சினை... சென்னை ரியல் எஸ்டேட் அதிபரைக் கொலை செய்த நண்பர்... குடும்பத்துடன் கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பர் குடும்பத்தினரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கொடுத்தக் கடனைத் திருப்பிக் கேட்டதால் இந்தக் கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருவள்ளூரை அடுத்த அரண்வாயலில் ஒரு பிளாஸ்டிக் பீப்பாயில் ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாய்பேட்டை போலீசார், உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையே பத்திரிகையில் வெளியான செய்தியைப் பார்த்து சென்னை ஜாபர்கான்பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சின்னப்பொன்னு என்பவர் இறந்தது தன்னுடைய மகன் லட்சுமணன் (38) என போலீசாரிடம் அடையாளம் காட்டினார்.
கொலை செய்யப்பட்ட லட்சுமணன் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து லட்சுமணனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், லட்சுமணனின் நண்பரான ஜாபர்கான்பேட்டை தெய்வநம்பி தெருவை சேர்ந்த வெங்கடேசன் (36) என்பவர் மீது போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் தான் கொலையாளி என்பது தெரியவந்தது.
போலீசாரிடம் வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் லட்சுமணனிடம் அதிக பணம் புழக்கத்தில் இருந்து வந்தது. நான் பண கஷ்டத்தில் இருந்ததால் சில மாதங்களுக்கு முன்பு அவரிடம் கடனாக ரூ. 90 ஆயிரம் வாங்கினேன். குறித்த நேரத்தில் என்னால் கடனை திருப்பி கொடுக்க முடியாததால் லட்சுமணன் பணத்தை வட்டியுடன் திருப்பி தருமாறு வற்புறுத்தினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
லட்சுமணனை கொலை செய்துவிட்டால் தொல்லை இருக்காது என நினைத்து கடந்த 7-ந் தேதி அவரை என் வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். அப்போது எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் கத்தியால் அவரை குத்தி கொலை செய்தேன். பின்னர் எனது தந்தை ராஜகோபால் (66), தாயார் உஷா (54) ஆகியோர் உதவியுடன் வீட்டிற்குள் இருந்த பிளாஸ்டிக் பீப்பாயில் லட்சுமணனின் உடலை போட்டு போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக அவர் உடல் மீது மிளகாய் பொடியை தூவினேன்.
கடந்த 9-ந் தேதி விடியற்காலை ஒரு மினி வேனை பேசி காய்கறி சப்ளை செய்ய வேண்டும் என வாடகைக்கு அழைத்து நானும், என் தந்தையும் காய்கறி மூட்டைகளுடன் பிளாஸ்டிக் பீப்பாயை வைத்து கொண்டு வந்தோம். அரண்வாயல் பகுதி வந்தவுடன் சாலையோரம் மினி வேனை நிறுத்தி காய்கறி சப்ளை செய்து வருவதாக டிரைவரிடம் கூறிவிட்டு பிளாஸ்டிக் பீப்பாயை வீசிவிட்டு வந்தோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வெங்கடேசன், அவருடைய தந்தை ராஜகோபால், தாயார் உஷா ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மினி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
துரிதமாக செயல்பட்டு சம்பவம் நடந்த சில தினங்களிலேயே குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படை போலீசார் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பாராட்டியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications