குடும்ப பிரச்சினை.. முன்னாள் ராணுவ வீரர் மீது கொதிக்க, கொதிக்க சுடு தண்ணீரை ஊற்றிய மனைவி!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்பத் தகராறு ஏற்பட்டதால் வெந்நீரை எடுத்து கணவன் மீது மனைவி ஊற்றியதால் தீக்காயமடைந்த கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி: கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் இடையே அவ்வப்போது ஏற்பட்டு வந்த குடும்பத் தகராறால் ஆத்திரமடைந்த மனைவி, கணவன் மீது வெந்நீரை எடுத்து ஊற்றியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குருபரப்பள்ளி அருகே உள்ள பாஞ்சாலிநகரை சேர்ந்தவர் பழனி (45) முன்னாள் ராணுவவீரர். இவருடைய மனைவி மலர்கொடி(34). இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம்.

கடந்த 19-ம் தேதியும் இருவருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மலர்கொடி அடுப்பில் கொதித்து கொண்டிருந்த வெந்நீரை எடுத்து பழனி மீது ஊற்றினாராம்.
இதில் வயிறு மற்றும் கைகளில் கொப்பளம் அடைந்த பழனியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பழனி கொடுத்த புகாரின்பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications