தங்கை திருமணத்திற்காக மனைவி நகையை விற்ற கணவர்.. காதையும் கடித்து துப்பினார்.. திருச்சி அருகே ஷாக்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமணத்தின்போது தான்கொண்டு வந்த சீர் குறித்து மனைவி கேள்வி எழுப்பியதால் ஆத்திரம் அடைந்த கணவன் அவரது காதை கடித்து துப்பினார்.
லால்குடி: லால்குடி அருகே திருமணத்தின்போது மனைவி வீட்டில் கொடுத்த நகை, பணத்தை தங்கைக்கு செலவு செய்தது தொடர்பாக கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மனைவியின் காதை கடித்து துப்பிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
லால்குடியை அடுத்த பச்சாம்பேட்டை முத்தியூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் பூமிபாலன். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நவமணியை திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

திருமணத்தின்போது நவமணிக்கு, அவருடைய வீட்டில் கொடுத்த நகை மற்றும் பணத்தை பூமிபாலன் அவருடைய சகோதரியின் திருமணத்துக்கு செலவு செய்துவிட்டாராம்.
இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது பூமிபாலன் நவமணியை தாக்கியதோடு, அவரது காதையும் கடித்து துப்பியுள்ளார். இது தொடர்பாக மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் அடிப்படையில் லால்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து பூமிபாலனையும், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவருடைய தாயார் செண்பகவள்ளியையும் (65) போலீஸார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications