பிரபல நடிகைகளுடன் உல்லாசம்.. கள்ளக்குறிச்சி சதுரங்கவேட்டை "விஐபி".. முதல்ல ஆசையை தூண்டணும்.. ஓ காட்
கள்ளக்குறிச்சி: "ஒருத்தனை ஏமாத்தணும்னா, முதல்ல அவன் ஆசைய தூண்டணும்" என்ற சதுரங்கவேட்டை படத்தின் டயலாக்குகளை மறக்க முடியாது.. இதிலுள்ள நிதர்சனமான உண்மைகளை நம்மால் மறுக்கவும் முடியாது. இதோ இன்னொரு சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.
சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தை என்ற இடத்தில் வசித்து வருகிறார் சமீர் அஹமத்... இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. ஆனாலும், வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

முளைத்த ஆசை: இதற்காக சென்னைக்கு சென்று, அங்குள்ள ஒரு கம்பெனியில் கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் டிரேடிங் செய்தார்.. பிறகு பலரை அதற்கு ஊக்குவித்து, தங்கத்தை பரிசாகவும் பெற்றார்.. ஆனாலும், சமீருக்கு ஆசை அடங்கவில்லை.. இந்த டிரேடிங் மூலம் இன்னும் நிறைய லாபம் சம்பாதிக்க முடிவு செய்து, தன்னுடையமுரார்பாளையம் கிராமத்திலேயே, குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார்.
தன்னுடைய கம்பெனிக்கு பல ஏஜென்டுகளை சேர்த்து, அவர்களுக்கு ஏகப்பட்ட வசதிகளை செய்து தந்திருக்கிறார்.. குறிப்பாக, என்ஃபீல்ட் பைக், ஆப்பிள் செல்போன், காஸ்ட்லி டிரஸ்கள், கோட் சூட் என வாங்கி தந்துள்ளார்.. ஏஜெண்ட்டுகளுக்கு மட்டுமல்லாமல், ஏஜென்டுகளின் சொந்தக்காரர்கள் பலரையும், இதில் முதலீடு செய்யும் வகையில் திட்டத்தை வகுத்தார்.
பக்கா பிளான்: அதாவது, ரூ.1 லட்சம் தந்தால், மாதம் ரூ.15 ஆயிரம் வட்டி தருவதாகவும், மாதம் ஒரு லட்சம் என வருடத்துக்கு 12 லட்சம் தந்தால், 24 லட்சமாக திருப்பி தரப்படும் என்றும் சமீர், இவர்கள் எல்லாரையுமே நம்ப வைத்துள்ளார்.
அதுமட்டுமல்ல, தன்னை பெரிய கோடீஸ்வரன் போல் அவர்களிடம் நடந்து கொண்டுள்ளார். இவர், எப்போதுமே காஸ்ட்லி கார்களில்தான் வலம் வருவாராம்.. ஆடி கார், ரோல்ஸ் ராயல்ஸ், மினி கூப்பர், பிஎம்டபிள்யூ, ஜாகுவார் என தினம் ஒரு காரில் வருவாராம்.. எப்போதுமே இவரை சுற்றி 10க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் இருப்பார்களாம்.. 5க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் எந்நேரமும் இவருடன் ஒட்டிக் கொண்டிருப்பார்களாம்..
ஒரு டீ குடிக்க வேண்டுமானால்கூட, கள்ளக்குறிச்சியிலிருந்து புதுச்சேரிக்கு போவாராம் சமீர்.. காலை டிபன் சென்னையில் என்றால், மதியம் சாப்பாடு கோயம்புத்தூருக்கு போய்விடுவாராம்.
ஆடம்பர வாழ்க்கை: இந்த ஆடம்பர வாழ்க்கையை பார்த்துதான், அவரது ஏஜெண்ட்டுகளும், ஏஜெண்ட்டிகளின் சொந்தக்காரர்களும் வீழ்ந்துவிட்டனர். சமீர் என்ற தொழிலபதிபரை அளவுக்கு அதிகமாகவே நம்பி, தங்களது சொத்துக்கள், நிலம், நகைகள், வீடு, வாசல், தோட்டம், அண்டா, குண்டா என எல்லாவற்றையும், சமீர் கம்பெனியிலேயே முதலீடு செய்தார்கள்..
இதில் சிலருக்கு மாதம் 15,000 ரூபாயை, 4 மாதங்கள் வரை சமீர் தந்ததாக தெரிகிறது.. இதை பார்த்ததுமே, அதுவரை ரூ.1 லட்சம், 2 லட்சம் என்று முதலீடு செய்து கொண்டிருந்த பொதுமக்கள், ரூ.5 லட்சம், 10 லட்சம் என்று பணத்தை முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதிலும் ஒரு நபர், 70 லட்சம் ரூபாய்க்கு இதில் முதலீடு செய்தாராம்.
ஏஜெண்ட்டுகள்: இப்படி மிக குறுகிய நாட்களிலேயே கோடிக்கணக்கில் சமீருக்கு பணம் கொட்டியது.. ஒருநாள், தன்னுடிய ஏஜென்டுகளிடம், விதவிதமான கார்களில் சென்றாலும், உட்கார்ந்தபடியே செல்வதால், முதுகு வலி வந்துவிடுகிறது. அதனால், சென்னைக்கு சென்று ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கிவருகிறேன் என்று சொல்லி உள்ளார்.. அதன்படியே சென்னைக்கும் வந்தார் சமீர்.. ஹெலிகாப்டரையும் சொந்தமாக வாங்கினார்..
பிறகு, சொந்த ஊருக்கு போகாமல், திடீரென சினிமா மீது மோகம் வந்துவிட்டது. அதனால், சொந்தமாகவே சினிமா படம் ஒன்றையும் எடுத்துள்ளார்.. பிறகு, வெளிநாடுகளுக்கு விமானத்திலும், கப்பலிலும் டூர் சென்றுள்ளார். ஆனால், சொந்த ஊருக்கு மட்டும் வராமல் இருந்துள்ளார். முதலீடு செய்த பொதுமக்கள், சமீரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, தன்னிடம் உள்ள கட்டு கட்டான பணத்தை வீடியோ எடுத்து அனுப்பிவைப்பாராம்.
விற்பனையகம்: பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்தானே??? நேற்று சமீர் வசமாக சிக்கி விட்டார்.. சென்னையில் ஒரு தனியார் கார் டீலர் கம்பெனியில் சமீர் இருப்பதாக, மூரார்பாளையம் பகுதி ஏஜென்டுகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சென்னை சென்று, சமீரை கோழி அமுக்குவது போல அமுக்கி சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்..
சமீர் சிக்கிவிட்டார் என்ற தகவல் பரவியதுமே, அந்த பகுதியை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு குவிந்துவிட்டனர்.. மொத்த பேரும் சேர்ந்து தங்கள் பணம் எங்கே? என்று கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு சமீர், முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களிடம் பணத்தை தந்திருக்கிறேன்.. அவர்கள் எல்லாரும் பிரபலங்கள் என்பதால், அவர்களின் பெயர்களை வெளியில் சொல்லக்கூடாது என்றாராம்..
பரபரப்பு: பொதுமக்கள் இதை நம்பினாலும், போலீசார் நம்புவார்களா என்ன? சங்கராபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக வந்து, சமீரை கைது செய்தனர்.. அவரிடம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதாக சொல்லி, ஆவேசத்துடன் காணப்பட்ட பொதுமக்களிடம் உறுதி தந்து, அனுப்பி வைத்தனர். இப்போது, சமீர் விசாரணையின் பிடியில் உள்ளார்.
இதில் இன்னொரு விஷயமென்றால், சினிமா படம் எடுக்க போன சமீர், மோசடி பணத்தில், நடிகைகளுக்கு செலவழித்ததாகவும் தெரிகிறது.. பெரும்பான்மையான பணத்தை உல்லாச வாழ்க்கைக்கும் செலவழித்ததாக சொல்கிறார்கள்.. அதனால், இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்புள்ளது? சமீரின் தொடர்பு வலையில் இருந்தவர்கள் யார்? என்ற லிஸ்ட்டை போலீசார் எடுக்கி போவதால், பெரும் பரபரப்பு எகிறி வருகிறது.. ஆக, உழைக்கிற காசுதானே உடம்புல ஒட்டும்..!!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications