மறைந்தார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பாலகுமாரான் காலமானார்.
சென்னை: கடும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பாலகுமாரன் மாரடைப்பால் காலமானார்.
தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் கடந்த 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களை அவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய நாவல்களில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலம். பல்வேறு விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார்.

நாயகன், குணா, ஜென்டில் மேன் உள்ளிட்ட பல படங்களில் வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றி உள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
71 வயதான பாலகுமாரன் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென அவருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி திடீர் மாரடைப்பால் பாலகுமாரனின் உயிர் பிரிந்தது.
பாலகுமாரனின் இந்த திடீர் மறைவு இலக்கிய உலகில் அனைவரையும் பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications