"காலா".. மோஷன் போஸ்டர் போட்டும், ஸ்டிக்கர் வெளியிட்டும்... கொண்டாடும் ரசிகர்கள்!
ரஜினிகாந்தின் காலா படத்தின் ஸ்டிக்கர்களை வெளியிட்டும், மோஷன் பிக்ஸர் தயாரித்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 164-ஆவது புதிய படத்தின் பெயர் கடந்த வியாழக்கிழமை வெளியானதை தொடர்ந்து ஸ்டிக்கர்கள் அச்சடிக்கப்பட்டு அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கரின் 2.0 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு ரஜினி மகிழ்ச்சியான செய்திகளை தந்து அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு, ரஜினி தன் ரசிகர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். கடந்த 21 ஆண்டுகளாக ரஜினியை ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு அழைத்து வந்தனர்.

பிடிகொடுக்கவில்லை
எனினும் இத்தனை ஆண்டுகளாக பிடி கொடுக்காமல் இருந்த ரஜினி காந்த் தற்போது ரசிகர்களுடனான சந்திப்பின்போது அரசியலுக்கு வருவதற்கான சமிக்ஞைகளை அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் போருக்கு தயாராக இருங்கள் என்று தேர்தலில் போட்டியிடுவதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.

புது படம் பர்ஸ்ட் லுக்
இந்நிலையில் ரஜினிகாந்தின் 164-ஆவது படத்துக்கான தலைப்பை அதன் தயாரிப்பு நிறுவனமான தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த படத்துக்குான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. மிகவும் வித்தியாசமான ஆடையில் 360 டிகிரி கோணத்தில் அமர்ந்திருக்கும் ரஜினியின் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இரட்டிப்பு மகிழ்ச்சி
அரசியலுக்கு வருவதாக ரஜினி தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிப்பது இரட்டிப்பு சந்தோஷமாக உள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். அதை கொண்டாடி மகிழும் வகையில் வாகனங்கள், வீடுகளில் ஒட்டி கொள்வதற்காக அந்த பர்ஸ்ட் லுக் ஸ்டிக்கர்களை அச்சடித்துள்ளனர்.
மோஷன் பிக்சர் தயார்
ரஜினியின் காலா படத்தை கொண்டு கிருபா சரவணன் என்ற ரஜினி ரசிகர் மோஷன் போஸ்டரை தயார் செய்து யூடியூபில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நாளை தொடங்கவுள்ள நிலையில் தற்போது ரசிகர்கள் அதை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். தன் உடல் ஒத்துழைக்கும் வரை ரசிகர்களை மகிழ்விப்பது என்று ரஜினி ஏற்கெனவே ஒரு விழாவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications