நீதி கேட்ட மகனின் காதலியை வெட்டிக் கொன்ற தந்தை: காதலன் குடும்பத்தோடு தலைமறைவு
ஈரோடு: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவான காதலனையும், அவனது குடும்பத்தாரையும் ஈரோடு போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஓராண்டாக கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த சத்தியப்பிரியாவும், சொட்டையான்பாளையத்தைச் சேர்ந்த ரகுநாத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், திடீரென மனம் மாறிய ரகுநாத், சத்தியப்பிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி கடந்த ஞாயிறன்று மதியம் ரகுநாத் வீட்டிற்குச் சென்றுள்ளார் சத்தியப்பிரியா.
அப்போது, ரகுநாத்தின் பெற்றோருக்கும், சத்தியப்பிரியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரகுநாத்தின் தந்தை சத்தியப்பிரியாவைக் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில், சம்பவ இடத்திலேயே சத்தியப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சத்தியப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள ரகுநாத், ஈஸ்வரன், ஈஸ்வரனின் மனைவி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications