கடன் வாங்கி விதைத்த நெல் முளைக்காததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை ?
திருத்துறைப்பூண்டியில் நேரடி நெல் விதைப்பு முளைக்காததால் வேதனையில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே கடன் வாங்கி விதைத்த நெல் முளைக்காததால் மனமுடைந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ். இவர் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நேரடி சம்பா சாகுபடி விவசாயத்தை மேற்கொண்டுள்ளார். போதிய மழை மற்றும் விவசாயத்திற்கு தேவையான அளவில் தண்ணீர் இந்தாண்டு வராமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பயிர்கள் கருகி சுமார் 4 ஏக்கர் நிலமும் முற்றிலும் பாதிப்பிற்குள்ளானது. இதனால் கடந்த சில நாட்களாக என்ன செய்வதென்று தெரியாமல் வேதனையில் தவித்துள்ளார் கோவிந்தராஜ். வங்கியில் வாங்கிய கடனை எப்படி திருப்பி அடைப்பது என்ற சோகமும் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் விரக்தி அடைந்த கோவிந்தராஜ் கடந்த 1ம் தேதி வயல் அருகே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
பயிர்கள் வாடியதால் வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இது சந்தேக மரணம் என காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. அவரின் இறப்பு தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் விளக்கமளித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications