கும்மியடித்து.. ஆடிப் பாடி விதைத்து... மழைக்காக வருண பகவானிடம் நூதன வேண்டுதல்
கோவி்ல்பட்டி: கோவில்பட்டி அருகே புது அப்பனேரியில் மழை வேண்டி முளை பிடித்த தானியங்களை விவசாயிகள், பெண்கள் கும்மியடித்து, ஆடிப்பாடி நிலங்களில் விதைத்து நூதனமான முறையில் வேண்டினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டரா பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் மழையை நம்பியே விவசாய பணிகள் நடைபெறும். பொதுவாகவே கோவில்பட்டி பகுதிகளில் அதிகளவில் வெயில் கொளுத்தும். மேலும் அந்த பகுதி கந்தக பூமி ஆகும்.
தீப்பெட்டி, பட்டாசு போன்ற பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும். இந்த பகுதிகளில் கோடை காலங்களில் நடமாடவே முடியாத அளவுக்கு வெப்பம் மிகுந்து காணப்படும்.
அப்படிப்பட்ட இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வி்ட்டது. இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார விவசாய விளை நிலங்கள் விளையாட்டு மைதானம் போல் காட்சியளிக்கிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக கீழே சென்று விட்டது.
இதனால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது. விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழையை எதிர்பார்த்து நிலத்தை பண்படுத்தி வந்தனர். இதில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் மழை பெய்ய வேண்டி பூஜைகள், யாகங்கள் அங்கங்கே நடந்து வருகிறது.
இந்நிலையில் மழை வேண்டி கோவில்பட்டி அருகே புதுஅப்பனேரி கிராமத்தில் நூதன வழிபாடு நடந்தது. புதுஅப்பனேரியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் விவசாயிகள் முளை கட்டிய தானியங்களை விளை நிலங்களில் விதைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
ஊர்வலத்தின் போது கிராம மக்கள் மழை பெய்ய வேண்டி கும்மியாட்டம், கோலாட்டத்துடன் கிராமப்புற பாடல்களை பாடியபடி சென்றனர். இதையடுத்து கிராமத்திற்கு அருகே உள்ள வயலில் முளையிட்ட தானியங்களை விவசாயிகள் விதைத்தனர். பின்னர் வருண பகவானை வேண்டி வழிபட்டனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications