சென்னையில் தொடரும் திருச்சி விவசாயிகள் போராட்டம்... மெரீனாவில் தற்கொலைக்கு முயற்சி!
சென்னை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரியும், நதி நீர் இணைப்பை வலியுறுத்தியும், நிலம் கையகப் படுத்துதல் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருச்சியைச் சேர்ந்த விவசாயிகள் இன்றும் சென்னையில் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.
மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்திய அவர்களை போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
விவசாயிகளின் இந்த மெரீனா கடல் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டையை முற்றுகையிட...
திருச்சியை சேர்ந்த விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னையில் நேற்று கோட்டையை முற்றுகையிட முயன்று எம்.ஜி.ஆர். சமாதி அருகே கைதானார்கள்.

2வது நாளாக...
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும், நதிநீரை இணைக்க கோரியும், நிலம் கையகப் படுத்துதல் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித சங்கிலி...
இன்று அனைவரும் சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்தனர். அங்கு கடலில் மனிதச் சங்கிலி போல முதலில் கை கோர்த்து நின்றனர்.

தற்கொலைப் போராட்டம்...
பின்னர் அவர்கள் மெரீனா கடலில் இறங்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

கைது...
இதையடுத்து தற்கொலை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 29 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அனைவரையும் அங்கிருந்து குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தி பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள சமூகநலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பிரதமர் வீடு முற்றுகை...
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்டமாக பிரதமர் நரேந்திரமோடியின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று போராட்டக்குழு அமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications