8 வழி சாலை: விவசாயி தீக்குளிக்க முயற்சி.. கிணற்றில் குதித்த இன்னொருவர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு
பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Recommended Video

திருவண்ணாமலை: பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அதேபோல, செய்யாறில் 75 வயது முதியவர் ஒருவர் கிணற்றிலேயே விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் பதற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது.
சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை அமைக்க காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பிலும், 5 மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை, செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வீடுகளை கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அளவீடு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அளவீடு மேற்கொள்ள அதிகாரிகள் வரும்போது, விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, வீடுகளில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தியும், சில விவசாயிகள் விளைநிலங்களில் நட்ட கல்லை பிடுங்கி எறிந்தும், சிலர் தங்களது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர். ஒருசிலர் தங்களது நிலங்களில் கற்களை நடுவதை பார்த்ததும் தாங்க முடியாமல் மயங்கியும் விழுகின்றனர். நேற்றுகூட ஒரு மாணவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனாலும் அதிகாரிகள் தங்கள் பணியினை நிறுத்துவதாக தெரியவில்லை.
இன்று காலையும், நிலம் அளவீட்டு பணி துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறி, அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். விவசாயி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதை தொடர்ந்து அளவீட்டு பணியை பாதியிலேயே நிறுத்தி அதிகாரிகள் வெளியேறினர்.
அதேபோல, செய்யாறிலும் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் கிணற்றில் குதித்தார். அவருக்கு வயது 75. அவரை தொடர்ந்து மேலும் 2 பேரும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து, கிணற்றுக்குள் விழுந்தோரை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications