For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடரும் விவசாயிகள் தற்கொலை.. அதிமுகவிற்கு எதற்கு விவசாயிகள் தினம்?

காய்ந்து கருகி வரும் பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் மரணமடைந்த சுமார் 45 விவசாயிகளுக்கு நிவாரணம் கூட அறிவிக்காத அதிமுக அரசிற்கு எதற்காக விவசாயிகள் தினம் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: நீரின்றி பயிர் கருகுவதால் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மாரடைப்பால் மரணம் அடைகின்றனர். இவர்களுக்கென ஒன்றும் செய்யாத அதிமுக அரசு தேசிய விவசாயிகள் தினத்தை எப்படி உரிமை கோருக்கிறது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாகை, திருவாரூர், தூத்துக்குடி, உசிலம்பட்டி என்று நான்கு பகுதிகளில் 4 விவசாயிகள் இன்று ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டும் மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். இப்படி இறக்கும் விவசாயிகளுக்காகவும், தண்ணீரின்றி காய்ந்து கிடக்கும் விவசாயத்திற்கும் ஒரு துரும்பையும் எடுத்துப் போடாத தமிழக அரசிற்கு ஜெயலலிதாவின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக கோருவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்பியுள்ளனர்.

Farmers suicide continues, What are TN government steps?

காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிடாததாலும், பருவமழை சரியாக பெய்யவில்லை என்பதாலும், நீரின்றி பயிர்கள் கருகிப் போய்யுள்ளது. சம்பா சாகுபடி முற்றிலும் பாழாய் போய்விட்டது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பல விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். பயிர்களுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

அப்படி, இதுவரை 45க்கும் மேற்பட்ட விவசாயிகள் மடிந்துள்ளனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று இன்று எலிக் கறியை சமைத்து உண்ணும் போராட்டத்தை விவசாயிகள் திருச்சியில் நடத்தினார். உயிரிழந்த விவசாயிகளுக்கும், கருகிய பயிர்களுக்கும் நஷ்ட ஈடு கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அதற்கான சின்ன வருத்தம் கூட இன்னும் தமிழக அரசின் வாயில் இருந்து வெளிவரவில்லை.

இந்நிலையில், மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் தேசிய விவசாயிகள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் 23 தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது என்ற தகவல் கூட தெரியாமல் அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பதைத் தாண்டி, உண்மையில் விவசாயிகளின் நலனில் என்ன அக்கறை இந்த அரசு காட்டியிருக்கிறது என்பதுதான் கேள்வி.

உயிரழந்த விவசாயிகளுக்கான நஷ்ட ஈடோ, காய்ந்த போன பயிர்களுக்கு நிவாரணமோ வழங்க வாய்திருக்காத அதிமுக அரசு தேசிய விவசாயிகள் தினம் பற்றி பேச அருகதை இல்லை என்று விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
There are no steps have been taken by Tamil government for farmers suicide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X