கன்னியாகுமரியில் மூன்று வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது

Subscribe to Oneindia Tamil
  மூன்று வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை- வீடியோ

  கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கிய தந்தையை போலீஸார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஜீரோ பாயிண்ட் பகுதியில் மூன்று வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை ஐயப்பனை கடையாலுமூடு போலீஸார் கைது செய்துள்ளனர்.

  Father arrested for sexually assaulting her own daughter

  கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஜீரோ பாயிண்ட் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மனைவிகள். தற்போது இரண்டாவது மனைவி மல்லிகாவுடன் வாழ்ந்து வருகிறார்.

  இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.நேற்று மல்லிகா வீட்டில் இல்லாத போது குடி போதையில் வந்த ஐயப்பன் தனது மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

  Father arrested for sexually assaulting her own daughter

  அந்த சமயத்தில் வீட்டிற்குள் வந்த மல்லிகா குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .தொடர்ந்து இது குறித்து கடையாலுமூடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

  புகாரின் பேரில் போலீஸார் ஐயப்பனை கைது செய்து மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அங்கு மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Father arrested for sexually assaulting her own daughter. Kanyakumari police arrested a person who sexually assaulted his own three year old daughter.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற