குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தந்தையும் விஷம் குடித்து தற்கொலை
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் குடும்பத்தகராறு காரணமாக இரு பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் காரமடை தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் குணபாலன், 25, மனைவி சூரியா,27, இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை மனைவி வெளியே சென்ற நிலையில், குணபாலன், தனது இரண்டு குழந்தைகளையும் அருகே உள்ள கிணற்றில் வீசிவிட்டு, பூச்சி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குணபாலனை அக்கம் பக்கத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காரமடை போலீசார் குடும்பத் தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications