தஞ்சையில் பயங்கரம்.. மதுபோதையில் மண்வெட்டியால் தாக்கிய தந்தை.. 2 மகன்கள், மனைவி துடிதுடித்து பலி
தஞ்சை அருகே மதுபோதையில் மண்வெட்டியால் தந்தை தாக்கியதில் 2 மகன்கள் துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Recommended Video

தஞ்சை: தஞ்சை அருகே மதுபோதையில் மண்வெட்டியால் தந்தை தாக்கியதில் 2 மகன்கள் துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சை அன்னப்பன் பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதிக்கு 9 வயதில் தினேஷ் என்ற மகனும் 7 வயதில் தருண் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான ஜெயக்குமார் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

மண்வெட்டியால் தாக்கிய தந்தை
இந்நிலையில் மதுபோதையில் இருந்த ஜெயக்குமார் மனைவி அனிதாவை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். அப்போது சிறு பிள்ளைகளான தினேஷும் தருணும் தாயை காப்பாற்ற தந்தையை தடுத்துள்ளனர்.

பலத்த காயமடைந்த சிறுவர்கள்
அப்போது குழந்தைகளை மண்வெட்டியால் தாக்கியுள்ளார் ஜெயக்குமார். இதில் இரண்டு சிறுவர்களும் பலத்த காயமடைந்தனர்.

2 குழந்தைகளும் பலி
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 2 சிறுவர்களும் உயிரிழந்தனர்.

தாயும் பலி
இதையடுத்து படுகாயங்களுடன் போராடிய சிறுவர்களின் தாய் அனிதாவை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தாய் அனிதாவும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அதிர்ச்சியும் சோகம்
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான தந்தை ஜெயக்குமாரை தேடி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications