ஒன்றாக சேர்ந்து விமானப்படை ஹெலிகாப்டரை இயக்கிய தந்தை-மகன்
சென்னை: விமானப்படை பயிற்சி பள்ளி வரலாற்றில் தந்தையும், மகனும் சேர்ந்து சேத்தக் ஹெலிகாப்டரை இயக்கியது அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்திய விமானப்படையின் பயிற்சி பள்ளி சென்னை தாம்பரத்தில் உள்ளது. கடந்த 30ம் தேதி தென்பிராந்திய தளபதி ஏர் மார்ஷல் அருண் புருஷோத்தம் கருட் தனது மகன் லெப்டினென்ட் கமாண்டர் அபிஜித் கருடுடன் தேர்ந்து தாம்பரம் விமானப் படை நிலையத்தில் சேத்தக் ஹெலிகாப்டரை இயக்கினார்.

அவர்கள் சுமார் ஒரு மணிநேரம் ஹெலிகாப்டரில் பறந்தனர். அப்போது அருண் தனது மகனுக்கு பிறருக்கு விமானத்தை இயக்க பயிற்றுவிப்பதில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார்.
ஏர் மார்ஷல் கருடுக்கு 6 ஆயிரத்து 300 மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளது. அவர் பல வகையான விமானங்களை இயக்கியுள்ளார். மேலும் விமானங்களை இயக்க பிறருக்கு பயிற்சி அளித்துள்ளார்.
ஏர் மார்ஷல் கருட் வரும் மே மாதம் இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய விமானப்படை தளபதி என்.ஏ.கே. பிரவுன் தான் ஓய்வு பெறும் முன்பு புனே தளத்தில் இருந்து தனது மகன் ஸ்குவாட்ரன் லீடர் ஒமர் பிரவுனுடன் சேர்ந்து சுகோய் விமானத்தை இயக்கினார்.
அதற்கும் முன்பு 1990களில் ஹைதராபாத்தில் உள்ள விமானப் படை அகாடமியில் பயிற்சியின் ஒரு பகுதியாக தந்தையும், மகளும் சேர்ந்து விமானத்தை இயக்கியுள்ளனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications