இப்படி மீம் போட்டால் வழக்கு போடுவேன்.. பாத்திமா பாபு கோபம் #Metoo
Recommended Video

சென்னை: முன்னாள் செய்தி வாசிப்பாளர், இன்னாள் நடிகையான பாத்திமா பாபுவை திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ரொம்பகாலமாவே செவிவழியாக ஒரு வதந்தி பரப்பி வரப்படுகிறது.
இப்போது சமூக வலைத்தள காலத்தில், அது சோஷியல் மீடியா வாயிலாக பரப்பி விடப்படுகிறது.
இப்போது #Metoo ஹேஷ்டேக் பிரபலமாகியுள்ளது. நானும் பாதிக்கப்பட்டேன் என்ற அர்த்தத்தில் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து, கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
[மு.க.ஸ்டாலின் வதந்தி பற்றி இத்தனை வருடங்கள் கழித்து பாத்திமா பாபு வாய் திறக்க காரணம் என்ன? ]

பாத்திமா பாபு மீம்கள்
இந்த நிலையில்தான், பாத்திமா பாபு தனது குற்றச்சாட்டை தெரிவித்துவிட்டால், ஒரு கட்சியையே காலி செய்துவிடலாம் என்ற வாக்கியங்களுடன் மீம்கள் உலா வருகின்றன. இதுபோன்ற வதந்திகளை ஏற்கனவே பாத்திமா பாபு மறுத்து பேட்டியளித்துள்ளார். இருப்பினும், வசவுகள் நின்றபாடில்லை.
இந்த நிலையில்தான் பாத்திமா பாபு தனது பேஸ்புக் பதிவில் இந்த மீம்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதை பாருங்கள்.
ஐயோ பாவம்
இந்த மீம்களை மெனக்கெட்டு தயாரித்தவர்களுக்கு ஒரு ஐயோ பாவம் மற்றும் படிப்பவர்களைப் புன்னகைக்க வைத்த வகையில் உங்களுக்கு கிடைத்த வெற்றிக்கு பிடியுங்கள் என் வாழ்த்தையும். இரண்டு விஷயம். 1) இந்த அதீத கற்பனை உங்களளவில் உண்மையெனில் பாதிக்கப்பட்டவரின் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்துவது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.

சம்பவம் நடக்கவில்லை
2) இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்பதை இந்த வதந்தி உருவான ஆண்டிலிருந்தே என்னிடம் விளக்கம் கேட்ட பத்திரிகைகளிடமும் நண்பர்களிடமும் சொல்லி வந்திருக்கிறேன். யாராவது ஒரே ஒருவர் - ஒரு ஒற்றை ஆள் - மேடம் என்னிடம் நீங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

வழக்கு போடலாம்
உண்மை இப்படி இருக்க மீண்டும் மீண்டும் என் பெயரை இழுக்கும் உங்கள் மேல் நான் அவதூறு வழக்கு போடலாம்.
ஆனால் எனக்கு அதைவிட அழகான வாழ்க்கை இருக்கிறது வாழ்ந்து முடிக்க. ஆகவே இந்த மீம்களை உருவாக்கி பரப்புவோரே என் #me_too என்று கூறிக்கொண்டு...போங்க போயி புள்ளகுட்டிய படிக்க வையிங்க மக்கா. இவ்வாறு பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications