கூட்டணியில்லை… நழுவும் காங். தலைவர்கள்... அதிர்ச்சியில் ராகுல்காந்தி!
சென்னை: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், மணிஷ் திவாரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், அவர்கள் போட்டியிட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பத்தாண்டுகள் அமைச்சர்களாகவும், எம்.பிக்களாகவும் பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இம்முறை போட்டியிடாமல் விலக முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை வெளிப்படையாகவே அறிவித்து விட்டார். ஆனால் பிற தலைவர்கள் மறைமுகமாக இதனை தலைமைக்கு தெரிவித்து வருவதால் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது.

சிவகங்கை சிதம்பரம்
நிதியமைச்சரான ப.சிதம்பரம், தனது பழைய சிவகங்கை தொகுதியில் பல இடங்களில் உள்ளூர் தலைவர்களை சந்தித்து, சிறிய கூட்டங்களை நடத்தி வருகிறார். இதனால் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது மகன் கார்த்தியை களமிறக்கவே சிதம்பரம் இந்த அளவுக்கு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ராஜ்யசபா உறுப்பினராக
லோக்சபா தேர்தலில் போட்டியிடா விட்டாலும் ராஜ்யசபா எம்.பியாக நாடாளுமன்றத்திற்கு செல்ல அவர் விரும்புவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயந்தி நடராஜன் எஸ்கேப்
அதேப்போன்றுதான் ஜெயந்தி நடராஜனும் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமையன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பு மனு ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றபோது, ஜெயந்தி நடராஜனிடம் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர் தனக்கு விருப்பம் இல்லை எனக் கூறிவிட்டதாகவும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறுகின்றன.

தங்கபாலு, இளங்கோவன்
மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தான் போட்டியிடப்போவதில்லை என பகிரங்கமாகவே செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்துவிட்டார். அதேபோல கே.வி. தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்ற தலைவர்களும் தோல்வி பயத்தால் போட்டியிடுவதில்லை என முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மணிஷ் திவாரி
மணிஷ் திவாரி லூதியானா தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊழல் அமைச்சர்கள்
இதுமட்டுமல்லாது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் பன்சால், மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் அசோக் சவாண் மற்றும் சுரேஷ் கல்மாடி ஆகியோர் கூட எஸ்கேப் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிர்ச்சியில் ராகுல்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட தயாராகி வருகிறது. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி, மூத்த தலைவர்களே தோல்வி பயத்தில் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓட்டம் பிடிப்பதால், அதிர்ச்சியடைந்துள்ளார்.

கண்டிப்பாக போட்டியிடனும்
மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசிய ராகுல் காந்தி, கண்டிப்பாக இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என வருவதால், காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பமும், சிக்கலும் உருவாகி உள்ளது

தோல்வி பயம்
ஊழல் அமைச்சர்களை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடுமுழுவதும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையால் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையே நிலவுகிறது. சரியான கூட்டணியும் அமையவில்லை போன்ற பல காரணங்களினால்தான் காங்கிரஸ் தலைவர்கள் போட்டியில் இருந்து விலகி கொல்லைப்புற வாயில் ( ராஜ்யசபா) வழியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications