ஒரு "ஷாக்" செய்தி.. தூத்துக்குடி அனல் மின் நிலைய முதல் யூனிட்டில் உற்பத்தி பாதிப்பு!
தூத்துக்குடி: கடும் கோடை தமிழகத்தை வாட்டி வரும் நிலையில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வரும் நிலையில், தூத்துக்குடி முதலாவது யூனிட்டில் திடீர் பழுதால் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சிச் செய்தி வந்துள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் கடந்த 1979ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு தலா 210 மெகா வாட் திறனுள்ள 5 யூனிட்டுகள் மூலம் 1050 மெகா வாட் வரை மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த 5 யூனிட்டுகளும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை தாட்டியும் இயங்கி வருவதால் அங்கு அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பததி முடங்கி வருகிறது.

இதனால் அவற்றில் சில கடைசி யூனிட்டுகள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் மின் நுகர்வு அதிகரிப்பு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையம் ஓய்வில்லாமல் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த மின் உற்பத்திக்கு இடையே நேற்று மாலை திடீரென அனல் மின் நிலைய முதல் யூனிட்டில் பாய்லரில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் அது செயல்படாமல் உனடியாக நிறுத்தப்பட்டது. மின உற்பத்தி நிறுத்தப்பட்டதால் அங்கு 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பழுதை சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலத்தில் மட்டும் இங்குள்ள யூனிட்டுகளில் 25 தடவைக்கும் மேல் பழுது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications