விஜயகாந்த்.. மன்மோகனுடன் எப்படிப் பேசியிருப்பார்.. இப்படியெல்லாம் கலாய்க்குறாங்கப்பா பேஸ்புக்கில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேஸ்புக்கர்கள் குசும்புத்தனம் நாளுக்கு நாள் தாறுமாறாகிக் கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக அவர்களிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிக்கியுள்ளார்.

விஜயகாந்த் பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் போய்ச் சந்தித்துப் பேசியதை வைத்து விதம் விதமாக, டிசைன் டிசைனாக கிண்டலடித்துள்ளனர்.

அவரது படத்தையும், பிரதமருடன் இருப்பது போன்ற படத்தையும் வைத்து நக்கல் நய்யாண்டி செய்துள்ளனர். இதுதான் இப்போது பேஸ்புக்கில் படு வேகமாக பிரபலமாகி வரும் காமெடி பீஸாகியுள்ளது.

சார் bls சார்!

சார் bls சார்!

ஒரு போட்டாஷாப் புகைப்படத்தில் இப்படி வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. sir bls sir, i wando pesanum ungakita:.... அதற்கு மனமோகன் சிங் இப்படிப் பதிலளிக்கிறாராம்... sorry i dnt knw tamil...

யாருடா அது...

யாருடா அது...

அடுத்து இன்னொரு படத்தில் இப்படி ஒரு கூத்து.. அதாவது விஜயகாந்த் கை விரல்களை நீட்டி யாரையோப் பார்த்து கேட்பது போல அது உள்ளது. அதில், நான் டெல்லியிலே பிரதமரை சந்திச்சதை விளையாட்டு செய்தியிலே போட்டது யாருடா என்று கேப்டன் கேட்பது போல உள்ளது.

இது ரொம்பவே அடாவடியான கிண்டல்...

இது ரொம்பவே அடாவடியான கிண்டல்...

இதேமாதிரி இன்னொரு கிண்டல் படம் ரவுண்டு வருகிறது.. அதில், கொஞ்சம் ஓவராத்தான் போயிருக்கிறார்கள்.. அதில், 10 மணிக்கு எல்லாம் கடையை குளோஸ் பண்ணிடறாங்க. பீர் கூலிங்கா கிடைக்கறதே இல்ல. இப்போ எல்லாம் யாரும் பிராண்ட் பேரை சொல்லி சரக்கு வாங்குவது இல்ல 70 ரூபா குவாட்டர் 80 ரூபா குவாட்டர்னு சொல்லி தான் வாங்கறாங்க. ஒரு தடவை வாங்கும் பிராண்ட் அடுத்த தடவை கிடைக்கிறது இல்ல. சரி பாண்டி போய் வாங்கிட்டு வந்தாலும் வண்டியை புடிச்சி சரக்கை புடிங்கி வச்சிக்கறாங்க.நீங்க தான் எதாவது நடவடிக்கை எடுக்கனும் நான் உங்களை நம்பி தான் இருக்கேன் என்று பிரதமரிடம் விஜயகாந்த் கூறுவது போல எழுதியுள்ளனர்.

இதெல்லாம் புதுசு இல்லை

இதெல்லாம் புதுசு இல்லை

விஜயகாந்த்தை வைத்து கிண்டலடிப்பது இது புதிதில்லைதான். ஏற்கனவே அவர் முறைப்பதையும், உதடு துருத்துவதையும், கை கால்களை நீட்டுவதையும் வைத்து நிறையவே கிண்டலடித்துள்ளனர். இப்போது பிரதமரிடம் போய் வந்ததை வைத்து நக்கலடித்து வருகின்றனர்.

இன்னும் சிலர்

இன்னும் சிலர்

இன்னும் சிலர் விஜயகாந்த் படத்தையும், பிரதமர் படத்தையும் போட்டு கூடவே வடிவேலு படத்தைப் போட்டு, அவர் சொல்லும் பிரபலமான வசனமான, கொஞ்சம் ஒவராத்தான் போய்ட்டிருக்கு என்றும் வாரியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+