குஜராத் - மோடி - ஒயின்ஷாப் - 'கள்ளழகர்' ஷூட்டிங்.. விஜயகாந்த் பேச்சு.. பேஸ்புக்கில் ஒரே கிண்டல்..!
சென்னை: கள்ளழகர் படத்துக்காக குஜராத் போன கதையைச் சொல்லி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிய பேச்சை வைத்து பேஸ்புக்கில் அவரை கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.
விஜயகாந்த் எதைப் பேசினாலும் அதில் ஏதாவது ஒரு குழப்பம் அல்லது குறை வந்து விடுகிறது. அவரும் எப்படியெப்படியோ பேசிப் பார்க்கிறார். அப்படியும் இந்த குறை கண்டுபிடிப்பு நின்றபாடில்லை.
அந்த வகையில், இப்போது லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்த் பேசிய ஒரு பேச்சை வைத்து கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.

லைலாவுடன் நடித்த கள்ளழகர்
லைலாவுடன் ஜோடியாக விஜயகாந்த் நடித்த படம்தான் கள்ளழகர். இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காக குஜராத் போன கதையைச் சொல்லி ஒரு கூட்டத்தில் விஜயகாந்த் பேசி விட்டார். அது இப்போது நகைச்சுவைக்குள்ளாகியுள்ளது.

என்ன பேசினார் விஜயகாந்த்
விஜயகாந்த் தனது பிரசாரம் ஒன்றில் பேசுகையில், கள்ளழகர் பட ஷூட்டிங்கிற்காக குஜராத் சென்றபோது எங்கேயும் மது விற்கவில்லை.மோடியால்தான் குஜராத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலை இந்தியா முழுவதும் தொடர மோடிக்கே வாக்களியுங்கள்! என்பதுதான் விஜயகாந்த் பேசிய பேச்சாம்.

இதில் என்ன குற்றம்...
விஜயகாந்த் குறிப்பிட்டது போல குஜராத்தில் மது விற்பனை இல்லைதான். ஆனால் மோடி முதல்வரானது 2001ம் ஆண்டு. கள்ளழகர் படம் வந்ததோ 1999ம் ஆண்டு. அப்படி இருக்கையில், எப்படி கள்ளழகர் பட ஷூட்டிங் நடந்தபோது மோடியால் மது விற்பனையை தடை செய்திருக்க முடியும் என்று பேஸ்புக்கில் கேட்கிறார்கள். குஜராத்தில் மோடிக்கு முன்பே நிரந்தரமாக மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரமணாவுக்கே தடுமாற்றமா
ரமணா அச்சு அசராமல் பிழை ஏதும் இல்லாமல் புள்ளிவிவரங்களை புட்டு வைத்து பிச்சு உதறிப் பேசியவர் விஜயகாந்த். அவரே இப்படி தப்புத் தப்பான புள்ளிவிவரத்தைக் காட்டலாமா என்றும் பேஸ்புக்கில் கிண்டலடிக்கிறார்கள்.

ஒருவேளை அங்க போயும்...
விஜயகாந்த் ஏன் இப்படித் தப்பாகப் பேசினார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அங்க போயும் இவர் அதைத் தேடிக் கஷ்டப்பட்டிருப்பாரோ என்றும் கூட பேஸ்புக்கில் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார்கள்.
ரொம்பக் குழப்பமாத்தான் இருக்கு....
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications