'அம்மா' சொன்னாதானா... நம் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் பந்தல்... நாமளும் செய்யலாமே!
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும், கோடையின் உக்கிரம் சென்னையில் கொதித்துத் தான் கிடக்கிறது.
வெயிலின் கொடுமைக்குப் பயந்து மனிதர்களே வெளியில் செல்ல பயந்து வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் பாவம் பறவைகள், விலங்குகளின் நிலையை நினைத்துப் பாருங்கள்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் கட்டிடங்கள் மட்டுமே காணப்படும் நகரத்தில் பாவம் தண்ணீர் தேடி பறவைகளும் அலைந்து தான் கொண்டிருக்கின்றன. கோடையின் உக்கிரம் தாளாமல் பல சிறிய பறவைகள் இறந்து விடும் அவலமும் உள்ளது.

பறவைகளின் தாகம்...
பறவைகளின் வீடாகிய மரங்களை அழித்து, அவற்றிற்கு நீர் ஆதாரமான குளம், ஏரி போன்றவற்றையும் அழித்து, குழாயில் சுயநலமாக நீர் பிடித்து வாழும் நாம் நினைத்தால் பறவைகளின் துயரத்திற்கு சிறிய அளவில் தீர்வு காண முடியும்.

சிறிய கிண்ணம்... பெரிய மனசு
அதற்குத் தேவையானதெல்லாம், ஒரு சொம்புத் தண்ணீர், சிறிய கிண்ணம் மற்றும் பெரிய மனசு மட்டும் தான். ஆம், நம் வீட்டு மாடிச் சுவற்றிலோ, பால்கனியிலோ அல்லது வீட்டு காம்பவுண்ட் சுவற்றிலோ சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டாலே போதும். அந்த வழியாக செல்லும் பறவைகள் அவற்றைக் குடித்து தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும்.

வீட்டு தண்ணீர் பந்தல்...
சாலைகள் தோறும் மக்களுக்கு தண்ணீர் பந்தல்கள் தேவைப்படுவது போல, பறவைகளுக்கும் நாம் இது போன்று வீட்டில் சிறிய தண்ணீர் பந்தல்கள் போன்று அமைக்கலாம். ‘காக்கை, குருவி எங்கள் ஜாதி'.. என்ற பாரதியின் பரம்பரை நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சபாஷ்...
அட எங்கண்ணே கிளம்பிட்டீங்க... கிண்ணத்துல தண்ணீ ஊத்தி பறவைக்கு வைக்கவா... சபாஷ் உங்களைத் தாங்க பறவைகள் தேடிட்டு இருக்கு !
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications