லெக்கின்ஸ் சர்ச்சை கட்டுரை: குமுதம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்! ஆதரவு குவிகிறது
சென்னை: லெக்கின்ஸ் குறித்த கட்டுரை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, ஆன்லைன் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
'லெக்கின்ஸ் ஆபாசம் - எல்லைமீறும் இளசுகள்' என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ் வெளியிட்ட அட்டைப்பட கட்டுரையில், லெக்கின்ஸ் அணிந்த பெண்களை ஆபாச கோணத்தில் படம் பிடித்து போட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ஆன்லைனில் கையெழுத்து இயக்கம் தொடங்கி, குமுதம் மன்னிப்பு கேட்க வலியுறுத்திவருகிறார். நேற்று தொடங்கப்பட்ட ஆன்லைன் இயக்கத்தில் இன்று நண்பகல் நிலவரப்படி ஏறத்தாழ ஐயாயிரம் பேர் கையெழுத்திட்டிருந்தனர்.
இதுகுறித்து கையெழுத்து இயக்க முன்னுரை கூறுவது: பெண்களின் அனுமதியின்றியே குமுதம் அவர்கள் லெக்கின்ஸ் அணிந்த போட்டோவை பிரசுரித்துள்ளது. லெக்கின்ஸ் மீது குர்தா அணிந்த பெண்களையும், காற்றில் குர்தா விலகும்போது, மறைந்திருந்து போட்டோ எடுத்து ஆபாச கோணத்தில் போட்டுள்ளது.
Tweets by @kavithamuraliபெண்கள் டீசன்டாக ஆடை அணிவது குற்றங்களை குறைக்கும் என்ற கோணத்தில் பெயரில்லா ஒரு கவிஞர் கூறியதாகவும் செய்தியில் தகவல் தரப்பட்டுள்ளது. இது பெண்களின் மாண்புக்கு எதிரானது. எனவே கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று, குமுதத்தை மன்னிப்பு கேட்க வலியுறுத்தினால், பிற ஊடகங்களும், பெண்களுக்கு எதிரான ஸ்டோரிகளை பிரசுரிக்க ஒன்றுக்கு இரு முறை யோசிக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications