"களவாணிகளா, புறம்போக்குகளா".. முதல் முறையாக ஆக்ரோஷ அரசியலில் குதித்த மு.க.ஸ்டாலின்!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக பாஜகவை கடுமையாக விளாசியிருக்கிறார்.
Recommended Video

சென்னை: பாரதிய ஜனதா கட்சி மீதான கருத்துகளில் மென்மை போக்கை கடைபிடிப்பதாக தம் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் முதல் முறையாக வெளுத்து விளாசியிருக்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். கடலூர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் காட்டிய உக்கிரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அவரிடம் கருணாநிதி காட்டும் வேகத்தை தொண்டர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்தனர். ஜெயலலிதா மறைந்த நிலையில் அதிமுக ஆட்சி கவிழும்; திமுக ஆட்சி அமைக்கும் என மக்களே தங்களிடம் எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் பல முறை மேடைகளில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் மாற்றமும் நடைபெறவில்லை. மத்திய பாஜக அரசு தமிழகம் மீது மக்கள் விரோத திட்டங்களை திணித்த போதுகூட அறிக்கைகளால் கண்டனங்களை வெளியிட்டாரே தவிர கருணாநிதியைப் போல காட்டத்தை காட்டவில்லையே என்கிற பேச்சு இருந்து வந்தது.

விஜயேந்திரருக்கு கடும் கண்டனம்
இதனால் ஸ்டாலின் மீது விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்தன. கவிஞர் வைரமுத்து விவகாரத்திலும் கூட ஸ்டாலின் மென்மையாக செயல்படுவதாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விவகாரத்தில் விஜயேந்திரருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.

முதல் கண்டன குரல்
அதேபோல பத்மாவத் திரைப்பட விவகாரத்தில் டெல்லி அருகே பள்ளி குழந்தைகள் பயணித்த வாகனம் மீதான தாக்குதலுக்கு தமிழகத்தில் இருந்து முதல் கண்டன குரலை ஸ்டாலின் வெளிப்படுத்தியிருந்தார். அந்த கண்டன அறிக்கையில், இந்துத்துவா கும்பலை பயங்கரவாதிகள் என குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின்.

களவாணிகளா, புறம்போக்குகளா
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கடலூரில் நடைபெற்ற திமுகவின் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உக்கிரத்தை ஸ்டாலின் வெளிப்படுத்தினார். கழகங்கள் இல்லாத தமிழகம் என மூச்சுக்கு முன்னூறு முறை உச்சரித்து சீண்டிக் கொண்டிருக்கும் பாஜகவினரை களவாணி பசங்களா, புறம்போக்குகளா என அனல் கக்கி விமர்சித்தார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்
இது உடனடி விளைவுகளையும் ஏற்படுத்தியது. ஸ்டாலின் கண்ணியமில்லாமல் பேசிவிட்டார்; ஸ்டாலினே இப்படி பேசலாமா என ஏகத்துக்குமாக விவாதங்களை நடத்தி களைத்து போயுள்ளன டிவி விவாதங்கள். இதன் உச்சகட்டமாக டிவி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரி, ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் கூட குமுறினார்.

குதூகலிக்கும் ஆதரவாளர்கள்
அதேநேரத்தில் ஸ்டாலின் இந்த ஆவேச பேச்சை இந்துத்துவா எதிர்ப்பாளர்களும் திமுக தொண்டர்களும் ஆரவாரமாக வரவேற்று மகிழ்கின்றனர். இதைத்தான் எதிர்பார்த்தோம்... இப்படித்தான் திமுக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள், குதூகலிக்கிறார்கள்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications