அணில்கள்... ஆமைகள்... டுவிட்டரில் கொலை வெறியோடு மோதிக்கொள்ளும் 'தல' 'தளபதி' ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தும், விஜயும் நட்பு பாராட்டினாலும் அவர்களின் ரசிகர்கள் இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் போலவே அவ்வப்போது கொலைவெறியோடு டுவிட்டரில் மோதிக்கொள்கின்றனர். எதனால் இந்த பூர்வ ஜென்ம பகை என்று தெரியவில்லை. சில நாட்கள் அடங்கியிருந்த இந்த மோதல் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது.

அணில் என்று நடிகர் விஜய்க்கு பட்டப்பெயர் வைத்து கிண்டல் செய்து வருவது அஜீத் ரசிகர்களின் வழக்கம். அதேபோல ஆமை என்று நடிகர் அஜீத்துக்கு பட்டப்பெயர் வைத்து டுவிட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை வெல்ஃபேர் தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள். இதற்காக டேக் போட்டு விஜய் ரசிகர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரம்பிக்க மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

விஜய் பிறந்தநாள்

June 22 தலைவனின் தரிசனம் #AmWaiting இளைஞர்கள் இதயத்தின் அதிபதி இ(த)ளைய தளபதி 9 DAYS FOR WELFARE DAY

விஜய் ரசிகர்களின் வெல்ஃபேர் டே டேக், இதற்காக அவர்கள் பதிவிட்டு வரும் படங்கள், கருத்துக்கள் அஜீத் ரசிகர்களை டென்சனாக்கி வருகிறது.

நடக்கும் ஆனா...

இந்த வெல்ஃபேர் டே நடக்காது என்று என்னத்தக் கண்ணையா, வடிவேல் படம் போட்டு அஜீத் ரசிகர்கள் உடனே மீம்ஸ் போட்டு பதில் போட ஆரம்பித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அஜீத் ரசிர்களின் குரங்கு படம்

Rt Monkey 1 Favourite Monkey 2

விஜயை குரங்குடன் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டுள்ளார் அஜீத் ரசிகர் ஒருவர்

கால்ல விழனும்

அரபு நாட்டு சிங்கர் என்பவர் அஜீத் ரசிகர். இவர் விஜய் ரசிகர்களை வெறுப்பேத்த போட்ட டேக் இது. விஜய் இயக்குநர்களின் கால்களிலும், தியேட்டர்காரர்களின் கால்களிலும் விழுந்துதான் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார் என்று கிண்டலடித்துள்ளனர்.

அஜீத் ரசிகர்களின் டேக்

விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாட எடுத்து வரும் முயற்சிகளை முறியடிக்க SAVE CINEMA FROM VIJAY
என்று அஜீத் ரசிகர்கள் டேக் போட்டு பதிவிட்டு வருகின்றனர். விஜயை எந்த அளவிற்கு மட்டமாக சித்தரிக்க முடியுமோ அந்த அளவிற்கு சித்தரித்து மீம்ஸ்,பதிவுகள் போட்டு வருகின்றனர்.

எனக்கு இன்னொரு பேரு இருக்கு

தெலுங்கு டப்பிங் படங்களில் விஜய் அதிகம் நடிப்பதால் அவருக்கு மகேஷ்பாபு என்று பெயர் வைத்துள்ளனர். அதுதான் எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்று பாட்சா ரஜினி படத்தை போட்டுள்ளனர் அஜீத் ரசிகர்கள்.

பிறந்தநாள் கேக்

கோவையில் விஜய் ரசிகர்கள் தெறி படம் ரிலீஸ் ஆன போது பாலை திருடி கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தனர் என்று
செய்தி வெளியானது. எனவே பிறந்தநாளில் கேக் திருட வருவாங்க, எனவே பேக்கரி கடைக்காரங்க உஷார் என்கிறார் இந்த அஜீத் ரசிகர்.

ஆமைகள்

விஜயை கிண்டலடித்தால் விடுவார்களா அவரது ரசிகர்கள், பதிலுக்கு அவர்களும் போட்டு தாக்கி வருகின்றனர். ரஜினியுடன் அஜீத்தை கம்பேர் செய்வதற்க கிண்டல் செய்து போட்டுள்ளனர். என் பிறந்தநாளையும் வெல்ஃபேர் டேயாக கொண்டாடுவீர்களா என்று அஜீத் கேட்பது போலவும், அதற்கு கிண்டலாக வடிவேல் பாணியில் பதில் சொல்லி மீம்ஸ் போட்டுள்ளனர்.

இதெல்லாம் ஒவர்

என்னதான் ரசிகர்களுக்கு இடையே மோதல் இருந்தாலும் விஜய் போட்டோவிற்கு மாலை போட்டுள்ளார் இந்த அஜீத் ரசிகர். இவர்களின் மோதல் கடந்த சில நாட்களாகவே கட்டுக்கடங்காமல் உள்ளது.

கட்டுப்படுத்துவார்களா?

கட்டுப்படுத்துவார்களா?

டுவிட்டரில் ரசிகர்கள் மோதிக்கொள்வது பலரையும் எரிச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. சம்பத்தப்பட்ட நடிகர்கள், தங்களின் ரசிகர்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்த மோதலுக்கு முடிவு வரும் இல்லை எனில் விஜய் பிறந்நாளுக்கு முன்பாக இந்த ரசிகர்கள் நேரில் மோதிக்கொண்டாலும் ஆச்சரியமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+