திருப்பதியில் மட்டுமல்ல ஸ்ரீரங்கம் கோவிலிலும் நீடிக்கும் வடகலை, தென்கலை பஞ்சாயத்து!
திருப்பதியில் மட்டுமல்ல கடந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலிலும் கூட வடகலை, தென்கலை வைணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
சென்னை: திருப்பதி ஏழுமலையானுக்கு போட்ட நாமத்தின் வடிவத்தை அர்ச்சகர் ஒருவர் மாற்றியதால் சர்ச்சை வெடித்திருக்கிறது. இந்த பஞ்சாயத்து ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலிலும் தொடருகிறது.
வைணவத்தைப் பின்பற்றுவோரில் வடகலை, தென்கலை என இரு பிரிவினர் உண்டு. இருபிரிவினரும் தங்களது சம்பிரதாயங்களே உயர்ந்தது என போர்க்கொடி தூக்குவர்.

ஸ்ரீரங்கத்தில்..
இதேதான் தற்போது திருப்பதியில் வெடித்திருக்கிறது. கடந்த ஆண்டும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலின் கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை பூஜையில் வடகலை அர்ச்சகர்கள் பங்கேற்க முயன்றனர்.

கோர்ட் உத்தரவு
ஆனால் இதற்கு தென்கலை அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி யாகசாலை பூஜைகளில் வடகலை அர்ச்சகர்கள் உட்கார கூடாது என்பது தென்கலையினர் வாதமாக இருந்தது.

கோர்ட்டுக்கு போவோம்
அப்போது தென்கலையினர், 1941-ம் ஆண்டு துறையூர் முனிசீப் நீதிமன்றம் தந்த தீர்ப்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் தென்கலை அர்ச்சகர்களே வேத பாராயணங்களை ஓத முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இதை வடகலையினர் மீறினால் நீதிமன்றப் படிகள் ஏறுவோம் என்றனர்.

மீண்டும் பஞ்சாயத்து?
இருந்தபோதும் இந்த விவகாரத்தில் இந்துசமய அறநிலையத்துறை தலையிட மறுத்துவிட்டது. தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெடித்திருக்கும் பஞ்சாயத்து மீண்டும் ஸ்ரீரங்கத்தில் புயலை கிளப்பவும் வாய்ப்பிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications