அப்துல் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ராமேஸ்வரம் பயணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ராமேஸ்வரம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

jayalalitha

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி ஆகியோரும் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று ராமேஸ்வரம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்துவது குறித்து ஜெயலலிதா இன்று முடிவெடுப்பார் என்று அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.

இதனிடையே அப்துல்கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக அமைச்சர்கள் இன்று செல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+