சென்னை தி.நகர் குமரான் சில்க்ஸில் பெரும் தீ விபத்து... போராடும் தீயணைப்பு வீரர்கள்: வீடியோ
சென்னை தி.நகரில் குமரன் சில்க்ஸில் தீ விபத்து ஏற்பட்டு, கரும் புகை வெளிவந்து அப்பகுதியில் பரபரப்பாக உள்ளது. 100 தீயச்ணைப்பு வீரர்கள் தீயணைக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னை: சென்னையில் தி.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் மற்றும் சென்னை சில்க்ஸ் பகுதியில் தீப்பற்றிக்கொண்டு, வெறும் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. அந்த்க் கடைகளில் இருந்து குபுகுபுவென புகை வருவது அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். தமிழகத்தின் முதன்மையான வியாபாரத்தலமாக தியாகராய நகர் உள்ளது.

இங்கு வரிசையாக துணிக்கடைகளையும் நகைக்கடைகளை நெருக்கி கட்டியுள்ளனர். ஒரு கடைக்கும் இன்னொரு கடைக்கும் போதிய இடைவெளியோ, காற்றும் சூரிய வெளிச்சமும் செல்வதற்கான வாய்ப்பும் இல்லாத பகுதியாகவே இருக்கும்.
இந்நிலையில், இங்கு இன்று அதிகாலை குமரன் சில்க்ஸ் கடையில் தீவிபத்து ஏற்பட்டு அங்கிருந்து புகை வெளிவந்துள்ளது. உடனே அந்தத் தீ அருகிலிருக்கும் சென்னை சில்க்ஸ் கடைக்கும் பற்றிக்கொண்டது. உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் 15 தீயணைப்பு வண்டிகளும் 100 தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை அணைக்க போராடிக்கொண்டுள்ளனர்.
மேலும் தீயில் சிக்கிக் கொண்டிருந்த சென்னை சில்க்ஸ் கடையில் இருந்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் சென்னை மவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன், காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். அங்கு மக்கள் யாரும் கூட்டமாக நிறக வேண்டாம், வாகனக்களை நிறுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் தீவிபத்துக்காகன காரணம் இதுவரை கண்டுபிடிக்கபப்டவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தி.நகரில் அனுமதி பெறாமல் பல கட்டிடங்கள் அதிக மாடிகளைக் கட்டியுள்ளார்கள் என புகார் எழுந்தது. அதையடுத்து அந்த கட்டிடங்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால் திரும்பவும் அவை எந்த மாற்றமும் செய்யாமல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications