சென்னை ஆயிரம் விளக்கில் தீவிபத்து - டீக்கடை எரிந்து நாசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இன்று தீவிபத்து ஏற்பட்டது.இதில் இரண்டு கட்டிடங்கள் எரிந்து சாம்பலாயின.
ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அஜிஸ் முல்க் தெருவில் டீக்கடை ஒன்றில் சிலிண்டர் கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் டீக்கடை மற்றும் மாடியில் இருந்த தேவாலயம் சேதம் அடைந்தது. தீவிபத்து பற்றி அறிந்தவுடனேயே தீயை அணைக்கும் வீரர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைக்கும் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு முயற்சிகளுக்குப் பின் ஒருவழியாக தீயானது அணைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications