சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பாகின.
சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள தொழிற்பேட்டையில் பட்டாசு ஆலைகளுக்கான பேப்பர் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இதனை கனகவேல் என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு பணியை முடித்துவிட்டு அனைவரும் சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை இந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்புப்படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications