சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் பயங்கர தீ... நோயாளிகள் ஓட்டம்
சென்னை: சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இருப்பினும் உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

மருத்துவமனையின் முதல் தளத்தில் மருத்துவப் பொருட்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை இருந்த கிடங்கில் தீப்பிடித்தது. இந்த தீ இரண்டாம் தளத்திற்கும் பரவியது.
இதனால் நோயாளிகள், மற்றும் அவர்களது உறவினர்கள் அலறியடித்து வெளியேறினர். மற்றவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்த விபரங்களை வெளியிட ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications