நடிகர் கமல்ஹாசன் வீட்டில் திடீர் தீ விபத்து.. புத்தகங்கள் எரிந்து சாம்பலானது!

ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அறையில் இருந்த புத்தகங்கள் தீயில் கருகி சாம்பலானது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசன் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

fire in kamalhassan house

மூன்றாவது மாடியில் உள்ள அறையில் இருந்த ஃப்ரிஜ் அதிக வெப்பமடைந்ததால் தீ விபத்து நிகழ்ந்ததாகவும், இதனால் அதன் அருகில் இருந்த புத்தகங்களில் தீ பற்றி வீடு முழுவதும் புகை சூழ்ந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைந்து வந்த ஊழியர்கள் உடனடியாக கமலை மீட்டனர்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: என் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. நான் பத்திரமாக இருக்கிறேன், யாருக்கும் பாதிப்பு இல்லை. தீ விபத்தில் இருந்து தப்பிக்க உதவிய எனது ஊழியர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+