நெருங்கி வரும் தீபாவளி.. விற்பனையில் ஜோராய் பட்டாசுகள் - 4599 கடைகளுக்கு தீயணப்புத்துறை அனுமதி!
சென்னை: தமிழகம் முழுவதும் 4599 பட்டாசுக் கடைகள் திறப்பதற்கு தீயணைப்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்கள் கூட இல்லாத நிலையில், வியாபாரிகள் பட்டாசு கடைகள் திறப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக தீயணைப்புத்துறையினரிடம் அனுமதி பெறுவதற்கு வியாபாரிகள் விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர்.

குதூகல தீபாவளி:
சிறியவர் முதல் பெரியவர் வரை தீபாவளி திருநாளை குதூகலமாக கொண்டாடுவதில், பட்டாசு முக்கிய பங்கு வகிக்கிறது. சிவகாசியில் உள்ள சுமார் 800க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தாண்டு பல்வேறு விதமான புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பல வண்ண ரகங்களில் தயாராகியுள்ள இந்த பட்டாசுகள், தீபாவளி அறிமுகமாக சந்தைக்கு வரவுள்ளன.

புதிய பட்டாசு ரகங்கள்:
பல வண்ணங்களை உமிழும் வான வேடிக்கைகளும், வித்தியாசமாக ஒலிகளை எழுப்பும் வெடிகளும் இந்தாண்டு சிறுவர்களை குறி வைத்து சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

கலர் கலராய் வர்ண ஜாலம்:
தரைச்சக்கரம், பூச்சட்டி, ஹரிபாட்டார் மேஜிக் பட்டாசுகளை சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் போன்ற வடிவங்களில் செய்துள்ளதாகவும், அதிகளவில் இந்தாண்டு புதுமையாக செய்யப்பட்டுள்ளதால் பட்டாசின் மோகம் மக்களிடையே அதிகளவில் உள்ளது.

கடைகளுக்கு அனுமதி:
இந்தாண்டு இன்று வரை 5609 கடைகள் திறப்பதற்கு வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 4599 கடைகள் திறக்க தீயணைப்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது. 847 விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. 163 விண்ணப்பங்களை தீயணைப்புத்துறை நிராகரித்துள்ளது. தீபாவளி நெருங்கி வரும்போது, பட்டாசு கடைகள் திறப்பதற்கு இன்னும் வியாபாரிகள் விண்ணப்பிப்பார்கள் என தீயணைப்புத்துறையினர் கூறுகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications