சேலம் மாவட்ட வரலாற்றில் முதல் முறையாக பெண் கலெக்டர் பதவியேற்பு!
சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ரோகினி ராம்தாஸ் பாஜிபாக்கரே நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். 171 ஆண்டுகால சேலம் மாவட்ட ஆட்சியர்கள் வரலாற்றில், முதல் பெண் ஆட்சியர் ரோகினி என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியராக ரோகிணி ராம்தாஸ் பாஜிபாக்கரே திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சேலம் ஆட்சியராகப் பதவி வகித்து வந்த வா.சம்பத், சமூக பாதுகாப்பு திட்டங்கள் இயக்குநராக இடம் மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக ரோகினி, மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநராகவும் கூடுதல் ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளார். சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை காலை ரோகிணி ராம்தாஸ் பாஜிபாக்கரே ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ரோகிணி ராம்தாஸ் பேசுகையில், " தமிழக முதல்வரால் அறிவிக்கப்படும் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் விரைவாக பொதுமக்களுக்கு சென்று சேருவதற்கு தேவையான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்படும்.
குறிப்பாக, மாவட்ட நிர்வாகம் மக்களை நோக்கியே செயல்படும். அந்த வகையில், டெங்கு தடுப்பு நடவடிக்கையில் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப் பணியில் பொதுமக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பெண்கள் முன்னேற்றம்
பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையினருடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பயிற்சி வகுப்புகள்
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்பாடு அடைய செய்யும் வகையில், தேவையான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும். சுகாதாரம் குறித்து போதிய விழிப்புணர்வுகள் பெருமளவில் செயல்படுத்தப்படவுள்ளன.

முன்மாதிரி மாவட்டம்
சேலம் மாவட்டத்தை சுகாதாரம், கல்வி அறிவு, வேலைவாய்ப்பு என பொதுமக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அனைத்திலும் முன்மாதிரி மாவட்டமாகத் திகழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

புகையிலைப் பொருட்கள் விற்றால் நடவடிக்கை
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பான் பராக், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications