மோடி பயம் போயிருச்சே... தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதோடு, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
45 நாட்கள் தடைக்காலம் முடிந்து கடந்த சில தினங்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து 800 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றிருந்தனர். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை அவர்களை விரட்டியடித்தது.
படகுகளை சேதப்படுத்தியதோடு வலைகளையும் சேதப்படுத்தியதாக மீனவர்கள் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications