பிப்ரவரி 29ல் இலங்கை தூதரகம் முற்றுகை: 8 மாவட்ட மீனவ சங்கங்கள் அறிவிப்பு
நாகப்பட்டினம்: மீனவர்களின் படகுகளை விடுவிக்காவிட்டால் வருகிற 29ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தஞ்சை, நாகை உள்பட 8 மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளன.
தஞ்சாவூர், நாகப்பட்டினம்,புதுக்கோட்டை, காரைக்கால்,கன்னியாகுமரி,தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நாகையில் நேற்று நடைபெற்றது.

அப்போது இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வைத்துள்ள 75 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வுகாண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இலங்கை வசம் உள்ள 75 விசைப் படகுகளை விடுவிக்கக்கோரி வருகிற பிப்ரவரி 29ல் 8 மாவட்ட மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்ட நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் மீனவர்கள் பிரச்சினைக்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications