குமரியில் நடுக்கடலில் மோதிக்கொண்ட மீனவர்கள் – 2 கிராமங்களில் பதட்டம்
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடுக்கடலில் மீனவர்களின் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தைச் சேர்ந்த ராஜூ என்ற கிறிஸ்துராஜ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கன்னியாகுமரியில் இருந்து 7 நாட்டிக்கல் தொலைவில் கூட்டப்புளி கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களது விசைப்படகில் சிக்கி கூட்டப்புளி மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகள் அறுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் கிடைத்ததும் 4 படகுகளில் கூட்டப்புளி மீனவர்கள் கடலுக்கு விரைந்தனர்.
அந்த மீனவர்களுக்கும், சின்னமுட்டத்தில் இருந்து சென்ற மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் மீனவர்கள் தங்களது மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களை கடலில் போட்டு விட்டு சின்னமுட்டத்துக்கு வந்து விட்டனர்.
இந்த மோதலால் இரு மீனவ கிராமங்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications