மீன் பிரியர்களுக்கு நல்ல செய்தி.. தடைக்காலம் முடிகிறது.. மீன் வரத்து அதிகரிக்கும்
நாளையோடு மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதால் மீன்பிடிக்க தமிழக மீனவர்கள் தயராகி வருகின்றனர்.
நாகப்பட்டினம்: மீன்பிடி தடைக்காலம் நாளை முடிவடைவதை தொடர்ந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தயார் நிலையில் விசைப்படகு மீனவர்கள் உள்ளனர்.
மேலும் மீன்பிடி படகுகளில் டீசல், ஐஸ் கட்டிகள் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 1983ம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் உட்பிரிவுகளின் கீழ் கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டின் கிழக்கு கடல் நெடுகிலும் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வங்கக் கடலோரைப் பகுதி முழுவதிலும், அதாவது திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி கடற்பகுதி வரையில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த மீன்பிடி தடைக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாளை நள்ளிரவு முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல உள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications