தமிழகத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் – புதுக்கோட்டைக்கு புதிய கலெக்டர்!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களில் ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கணேஷ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறு தொழில்கள் கழக மேலாண்மை இயக்குனராக பணியாற்றும் வி.அமுதவல்லி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனரான மைதிலி ராஜேந்திரனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் தமிழ்நாடு பாடநூல் கல்வி சேவைகள் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
மத்திய அரசாங்க மருந்துகள் துறை இணை செயலாளராக முன்பு பணியாற்றிய ஷம்பு கல்லோலிக்கர் மாநில அரசு பணிக்கு மாற்றப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக அப்பதவியில் இருந்த வி.கே.ஜெயக்கொடிக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வி.கே.ஜெயக்கொடி மின் விசை நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு கழக முதன்மை செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக சி.மனோகரனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications