சேலம்: படுவேகத்தில் வந்த மணல் லாரி பஸ், பைக் மீது மோதி 5 பேர் பலி
சேலம்: சேலம் அருகே சந்தியூர் புதுரோட்டில் மணல் ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தனியார் பஸ், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாயினர். படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல்லுக்கு புறப்பட்ட தனியார் பேருந்து நேற்று காலை சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சந்தியூர் அருகே சென்றது. அப்போது எதிரே திருச்சியில் இருந்து சேலம் நோக்கி வந்த மணல் லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு, மறுபுறம் சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.

விபத்தில், பேருந்தில் பயணம் செய்த கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த லாரி கிளீனர் குமார் (30), சேலம் ஓமலூர் காமலாபுரத்தைச் சேர்ந்த பூர்ணிமா (21) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

தடுப்பை உடைத்துக் கொண்டு லாரி வந்தபோது எதிர்புறச் சாலையில் வந்த இரு சக்கர வாகனம், லாரியின் கீழே சிக்கியது. அதில் சேலம் கொண்டலாம்பட்டி சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்த ராஜா (28), அவரது மனைவி சரோஜா (26), ஒன்றரை வயது பெண் குழந்தை தனலட்சுமி ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர்.

விபத்தில் காயமடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர் அன்பழகன் தனியார் மருத்துவமனையிலும் மற்றும் 5 பேர் சேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications