முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: சென்னையில் 5 அதிமுகவினர் சுற்றி வளைப்பு?
சென்னை: வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் மேலும் ஐந்து அதிமுகவினர் சென்னையில் கைதாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் போலீஸ் தரப்பில் இதுவரை எதையும் உறுதிப்படுத்தவில்லை.
நெல்லையைச் சேர்ந்த வேளாண் உதவி செயற்பொறியாள் முத்துக்குமாரசாமி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேலதிகாரிகள் மற்றும் அதிமுகவினரின் கடும் நெருக்கடி மற்றும் மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்ததாக தகவல்கள் கூறின.
இதையடுத்து அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்தன. இதன் விளைவாக வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவியை இழந்தார். கடைசியில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் தலைமைப் பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் பலர் கைதாவார்கள் என்று பேச்சு அடிபட்டு வந்தது. இந்த நிலையில் கைதிலிருந்து தப்ப பல அதிமுகவினர் சென்னைக்கு தப்பி வந்து பல்வேறு மட்டங்களில் கைதிலிருந்து தப்ப முட்டி மோதி வருகின்றனர். இந்தப் பின்னணியில் இன்று 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் இந்தத் தகவலை போலீஸார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. கைதானவர்களில் அதிமுக ராஜ்யசபா எம்.பி ஒருவரின் மகனும் அடக்கம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications