சசிகலா நடராஜனுக்கு எதிராக சசிகலா புஷ்பாவுடன் கை கோர்க்கும் 5 தமிழக அமைச்சர்கள்
சசிகலா நடராஜன் அதிமுகவில் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராக சசிகலா புஷ்பாவுடன் 5 தமிழக அமைச்சர்கள் இணைந்து செயல்படுவதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
சென்னை: சசிகலா நடராஜனுக்கு எதிராக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவுடன் 5 தமிழக அமைச்சர்கள் கைகோர்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து தாம் நீக்கப்பட்டதற்கு காரணமே சசிகலா நடராஜன் கோஷ்டிதான் என குற்றம்சாட்டியிருந்தார் சசிகலா புஷ்பா. பின்னர் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கும் சசிகலா நடராஜனே காரணம் என்றார் சசிகலா புஷ்பா.

சசிகலா புஷ்பாவுடன்....
தொடர்ந்து சசிகலா நடராஜனை குறிவைத்து தாக்கி வருகிறார் சசிகலா புஷ்பா. தற்போது அதிமுகவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது சசிகலா தரப்பு. ஆனால் அவர்களது ஆதிக்கத்தை விரும்பாத அமைச்சர்கள் சசிகலா புஷ்பாவுடன் சேர்ந்து செயல்பட தொடங்கியுள்ளனராம்.

சசிகலா நடராஜனுக்கு என்ன தொடர்பு?
ஏற்கனவே அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என்னுடன் பேசிவருவதாக பேட்டியளித்து வருகிறார் சசிகலா புஷ்பா. தற்போது சசிகலா நடராஜனுக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்? என்ற சசிகலா புஷ்பாவின் குரலை அமைச்சர்கள் சிலரும் வெளிப்படையாக பேசி வருகின்றனராம்.

தோற்கடிக்க சதி
அத்துடன் சசிகலா புஷ்பாவை தொடர்பு கொண்டு 3 தொகுதி தேர்தலில் ஒரு அதிமுக வேட்பாளரையாவது தோற்க வைக்க வேண்டும் என்றும் சதி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள் சில அமைச்சர்கள். ஆனால் அப்படி செய்ய வேண்டாம்... ஜெயலலிதா உடல்நிலையை முன்வைத்தே பஞ்சாயத்தை கிளப்பலாம் எனக் கூறியிருக்கிறார் சசிகலா புஷ்பா.

புதிய அணி
அதிமுகவில் பாஜக ஆதரவு அணி, சசிகலா நடராஜன் அணி வரிசையில் தற்போது சசிகலா புஷ்பா அணியும் உதயமாக தொடங்கியுள்ளதாம்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications