கொலைகார தினகரனுக்கு டெபாசிட் கிடைக்கக் கூடாது.. இயக்குநர் சுந்தர்ராஜன் கொந்தளிப்பு
அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து திரைப்பட இயக்குநர் சுந்தர்ராஜன் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது, கொலைகார குடும்பத்தைச் சேர்ந்த தினகரனை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்
சென்னை: ஆர்.கே. நகரில் போட்டியிடும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாக திரைப்படத் துறையைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பலர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆர். சுந்தர்ராஜனனும் ஆர். நகர் தொகுதி முழுவதும் சுற்றி திரிந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

கொலைகார குடும்பம்
கொலைகாரக் குடும்பம் என்று தெரிந்துதான் தைரியமாக அவர்களை எதிர்த்து நின்கிறோம். இந்த ஆர். கே. நகர் தொகுதியில் அவர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யாராவது வந்தார்கள் என்றால் இந்தத் தொகுதியில் இருக்கும் பெண்கள் அவர்களை உள்ளே நுழைய விட மாட்டார்கள்.

டெபாசிட்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கொன்ற குடும்பம் சசிகலா குடும்பம். அந்த கொலைகாரக் குடும்பத்தைச் சேர்ந்த தினகரனுக்கு வாக்களிக்காதீர்கள். அவர் இந்தத் தொகுதியில் டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்.

எங்க வீட்டு பிள்ளை
எம்ஜிஆர் எப்படி நம்ம வீட்டு பிள்ளை என்று பெயர் பெற்றாரோ, அதே போல மதுசூதனனை உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வாக்களிக்க வேண்டும். ஒரு வீட்டில் எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் எங்க வீட்டு பிள்ளை என்று எம்ஜிஆரை மட்டும்தான் அனைவரும் சொன்னார்கள். அந்த அளவிற்கு எம்ஜிஆர் மக்கள் மனதில் நின்றவர்.

உங்க வீட்டு பிள்ளை
அதே போன்று இந்தத் தொகுதியில் போட்டியிடும் மதுசூதனனும் மக்கள் மனதில் நின்றவர். அவருக்கே உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும். அவர் வெற்றி பெரும் வரை தொடர்ந்து நாங்கள் அனைவரும் அயராது பாடுபடுவோம் என்று சுந்தர்ராஜன் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications