For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொட்டித் தீர்த்த கோடை மழை:அணைப்பிள்ளையார் அருவியில் ஆர்ப்பரிக்கும் நீர்..கொட்டகுடி ஆற்றில் வெள்ளம்!

தமிழக - கேரள எல்லையில் கோடை மழை கொட்டித் தீர்ப்பதால் தேனி கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொட்டகுடி ஆற்றில் வெள்ளம்!-வீடியோ

    தேனி: தமிழக - கேரள எல்லையில் கோடை மழை கொட்டித் தீர்ப்பதால் தேனி கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.

    அதே நேரத்தில் பல மாவட்டங்களில் கோடை மழையும் கொட்டி வருகிறது. திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.

    வீடுகளுக்குள் வெள்ளநீர்

    வீடுகளுக்குள் வெள்ளநீர்

    திருச்சி மாவட்டம் துவாக்குடி, பெல், மணப்பாறை, துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ரஞ்சிதபுரம் பகுதியில் கொட்டிய மழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.

    ஒன்றரை மணிநேரத்தில் 7.5செ.மீ

    ஒன்றரை மணிநேரத்தில் 7.5செ.மீ

    திருச்சியில் ஒன்றரை மணி நேரத்தில் 7.5 சென்டி மீட்டர் மழை பதிவானது. 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேலாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று திடீரென பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அருவியில் ஆர்ப்பரிக்கும் நீர்

    அருவியில் ஆர்ப்பரிக்கும் நீர்

    இதனிடையே தமிழக - கேரள எல்லையில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தேனி அணைப்பிள்ளையார் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கொட்டகுடி ஆற்றில் வெள்ளம்

    கொட்டகுடி ஆற்றில் வெள்ளம்

    இதேபோல் போடி கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    English summary
    Some places of Tamil nadu got heavy rain. Flood in Theni Anaipillaiyar falls. flood in Bodi Kottakudi river. Public feels happy due to the rain and flood.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X