கனமழையால் குற்றால அருவிகளில் திடீர் வெள்ளபெருக்கு... குளிக்க தடை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
குற்றாலம்: திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று குற்றால அருவிகளில் குளிக்கத் திடீர் தடை விதிக்கப் பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள்.
அருவி என்றாலே நம் அனைவரது மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது குற்றாலம் தான். இது குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகமுள்ள காலமாததால், சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், குற்றாலத்தில் இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நேற்று இரவு அங்குள்ள அருவிகளில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவிகளில் குளிக்க திடீர் தடை அறிவிக்கப்பட்டது.
மழை....
குற்றாலத்தில் ஜூன் மாதம் சாரல் ஏமாற்றிய நிலையில் ஜூலை மாதம் தொடங்கியது முதல் கண்ணாமூச்சி காட்டி வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக குற்றாலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.
சாரல்...
குறிப்பாக அதிகாலை வேளையில் சாரல் நன்றாக பெய்தது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் வெயில் தலை காட்டவே இல்லை. சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. காலையில் மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது.
தடை...
இதனால், சுமார் 3 மணி நேரம் மெயின் அருவியில் குளிக்க திடீர் தடை விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளப்பெருக்கு ஓரளவுக்கு குறைந்த பின்னர் ஓரு ஒரமாக நின்று குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
சுற்றுலாப் பயணிகள்...
ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும், பழைய குற்றாலம், புலியருவியிலும், சிற்றருவியிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications