தமிழக கேரளா எல்லையில் போக்குவரத்து நெரிசல்: ஐயப்ப பக்தர்கள் அவதி.
செங்கோட்டை: தமிழக கேரளா எல்லையான புளியரையில் விடிய,விடிய ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஐயப்ப பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல பூஜை விழாவிற்காக ஆண்டுத்தோரும் கார்த்திகை 1ம் தேதிமுதல் மாலை அணிந்து, விரதமிருந்து நாடெங்கிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம்.

தற்போது சபரிமலை சீசன் என்பதால் தமிழக எல்லாப் பகுதியான குமுளி,செங்கோட்டை புளியறை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் விடிய,விடிய சென்று வருகின்றன.
நேற்று இரவு சுமார் 11மணிமுதல் திடீர் என ஆரியன்காவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் உருவாகியது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் ,கேரளாவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களும் இருபகுதிகளிலும் தேக்கம் அடையத் தொடங்கியது.

இதனால் இரண்டு பகுதிகளிலும் விடிய,விடிய வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆரியன்காவு பகுதியில் அமைந்துள்ள குறுகலான ரயில்வே பாலம்தான் தினம்,தினம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்.
இந்த பகுதியில் ஒரு கனரக வாகனம் மட்டுமே செல்லமுடியும்.அதே சமயம் இதில் பழுது ஏற்பட்டு நிற்கும் வாகனத்தால் நேற்று இரவு முதல் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இதில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் சபரிமலை செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications