காரைக்குடி பக்கம் இருக்கீங்களா.. அப்ப, தவறாம இந்த உணவுத் திருவிழாவுக்குப் போய்ட்டு வாங்க!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலப் பள்ளியில் நாளை உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
காலை 10 மணிக்கு இந்தத் திருவிழா தொடங்குகிறது. கிராமக் கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளி வளர்ச்சி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கல்வி அலுவலர் அ. மாரிமுத்து, கவிதா நர்சிங் ஹோம் டாக்டர் ஆ. ரமேஷ், அழகப்பா பல்கலைக்கழகம், வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் கே. கிருஷ்ணமூர்த்தி, காரைக்குடி இராமநாதன் பிக்சர்ஸ் வி.ஆர். இராமநாதன், காரைக்குடி சபரி டிராவல்ஸ், என். கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
உணவுத் திருவிழாவின் நடுவர்களாக கோட்டையூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கே.எஸ். சோபனா, அரியக்குடி அரசு மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கே. சுசீலா ராணி, காரைக்குடி எஸ்.எம்.எஸ். பெண்கள் மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் எஸ். புவனேஸ்வரி ஆகியோர் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி பக்கம் இருந்தீங்கன்னா.. போய் ஒரு எட்டு பார்த்து விட்டு வாங்க!


Click it and Unblock the Notifications
