தனியார் ஹோட்டலில் இருந்த சத்துணவு முட்டைகள்.. ஷாக் ஆன அதிகாரிகள்! “பயங்கர முறைகேடு”: பாஜக பாய்ச்சல்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள உணவகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அங்குள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சின்னசேலம் - சேலம் மெயின் ரோட்டில் இருந்த உணவகம் ஒன்றில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள், முத்திரையுடன் அங்கு இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய முட்டைகள் இங்கு எப்படி வந்தது என்று ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறியதையடுத்து, 100க்கும் மேற்பட்ட முட்டைகளைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சட்டவிரோதமாக அங்கன்வாடி சத்துணவு முட்டைகளை வைத்திருந்த அந்தக் கடைக்கு ரூ. 5000 அபராதம் விதித்தனர்.
தனியார் ஹோட்டலில் அரசு வழங்கும் சத்துணவு முட்டைகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு வழங்கும் முட்டைகள் முறைகேடாக ஹோட்டல்களுக்கு விற்கப்படுவது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் ஒரு உணவகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டைகள் விற்பனைக்கு இருந்தது, சத்துணவு திட்டத்தில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இந்த சம்பவத்தை சிறியதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்லாமல், தமிழகம் முழுவதும் சோதனைகள் நடைபெற…
— Narayanan Thirupathy (@narayanantbjp) September 29, 2023
நாராயணன் திருப்பதி தனது X (ட்விட்டர்) சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளக்குறிச்சியில் ஒரு உணவகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டைகள் விற்பனைக்கு இருந்தது, சத்துணவு திட்டத்தில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தை சிறியதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்லாமல், தமிழகம் முழுவதும் சோதனைகள் நடைபெற வேண்டும். குறிப்பாக முட்டைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும். குழந்தைகளின் சாப்பாட்டில் ஊழல் புரியும் கிராதகர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications