அடுத்து என்ன 'அம்மா ஜெயிலா'.. டுவிட்டரில் ஓவராக கலாய்க்கும் சு. சாமி
சென்னை: சுப்பிரமணியன் சாமியின் வாய் சும்மாவே இருக்காது போல. யாரையாவது கிண்டலடித்தபடியே இருக்கிறார். இப்போது சிறைக்குப் போயுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வம்புக்கு இழுத்துள்ளார்.
ஜெயலலிதா வழக்கின் காரணகர்த்தாவே இந்த சாமிதான். இவரால்தான் இன்று ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ளார்.
அப்படி இருக்கையில் சும்மா இருக்க முடியுமா இவரால்.. இதோ டிவிட்டரில் ஜெயலலிதாவை வாரி கமெண்ட் போட்டுள்ளார். தமிழகஅரசின் அம்மா திட்டங்களை வைத்து கிண்டலடித்துள்ளார் சாமி தனது டிவிட்டரில்.

கடைசித் திட்டம்...
அம்மா திட்டங்களில் கடைசியாக ஜெயலலிதா அறிவித்தது அம்மா சிமெண்ட் திட்டம்தான். அம்மா சிமெண்ட் திட்டத்தை அறிவித்த பின்னர்தான் அடுத்த நாள் அவர் கைதானார். சிறைக்கும் போனார்.
|
அடுத்து அம்மா ஜெயிலா...
இதுகுறித்து சாமி போட்டுள்ள டிவிட் கருத்தில், அம்மா கேன்டீன், அம்மா சிமென்ட், அடுத்து அம்மா ஜெயில் வருமோ என்று கேட்டுள்ளார்.

கிண்டல்...
அதேபோல இன்னொரு டிவிட்டில் அழுதபடி பதவியேற்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களைக் கிண்டலடித்துள்ளார்.
|
ஜனாதிபதி ஆட்சி தான்...
அதில், சென்னையில் அழுது வடியும் குழந்தைகளைக் கொண்ட கேபினட் வந்துள்ளது. இவர்களால் சட்டம் ஒழுங்கை எப்படிக் காப்பாற்ற முடியும் என்று தெரியவில்லை. அப்படி நடந்தால் ஜனாதிபதி ஆட்சி தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.

தயாராகவும்...
அதே டிவிட்டில், ஜெஜெ மேலும் பல வழக்குகள் பாயக் காத்துள்ளன. தயாராக இருக்கவும் என்றும் கூறியுள்ளார் சாமி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications