போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல்: அஜீத்-விஜய் அவுட், ரஜினியை முந்திய தனுஷ், சந்தானம்
சென்னை: போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டுள்ள 100 பிரபலங்கள் பட்டியலில் சந்தானத்தின் பெயர் உள்ளது. ஆனால் அஜீத், விஜய் ஆகியோரின் பெயர்கள் இல்லை.
போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை இந்த ஆண்டுக்கான டாப் 100 பிரபலங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபலங்களின் வருமானம் மற்றும் அவர்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளனர் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு பட்டியலில் ஷாருக்கான் மூன்றாவது இடத்தில் இருந்தார்.

சல்மான்
கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த சல்மான் கான் இந்த ஆண்டு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

டோணி
டோணி கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி நான்காவது இடத்தில் தான் உள்ளார். கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த அமிதாப் பச்சன் இந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஆமீர் கான்
போர்ப்ஸ் பட்டியலில் ஆமீர் கான் 5வது இடத்திலும், அக்ஷய் குமார் 6வது இடத்திலும், விராட் கோஹ்லி 7வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 8வது இடத்திலும், தீபிகா படுகோனே 9வது இடத்திலும், ரித்திக் ரோஷன் 10வது இடத்திலும் உள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான்
கடந்த ஆண்டு பட்டியலில் 13வது இடத்தில் இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ஆண்டு 14வது இடத்தில் உள்ளார்.

மகேஷ் பாபு
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு போர்ப்ஸ் பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு அவர் 30வது இடத்தில் இருந்தார்.

தனுஷ்
கடந்த ஆண்டு பட்டியலில் 78வது இடத்தில் இருந்த தனுஷ் பல இடங்கள் முன்னேறி 37வது இடத்திற்கு வந்துள்ளார்.

அஜீத், விஜய்
2014ம் ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 41வது இடத்தில் இருந்த விஜய் மற்றும் 51வது இடத்தில் இருந்த அஜீத் ஆகியோரின் பெயர்கள் இந்த ஆண்டு பட்டியலில் இல்லை.

ரஜினி, கமல்
போர்ப்ஸ் பட்டியலில் கமல் 46வது இடத்தில் உள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் கடந்த ஆண்டு 45வது இடத்தில் இருந்த ரஜினிகாந்த் இந்த ஆண்டு 69வது இடத்தில் உள்ளார்.

சந்தானம்
நகைச்சுவையில் கலக்கி வரும் சந்தானம் போர்ப்ஸ் இந்தியா பட்டியலில் 52வது இடத்தில் உள்ளார்.

சூர்யா, ஆர்யா
போர்ப்ஸ் பட்டியலில் சூர்யா 71வது இடத்திலும், பிரபாஸ் 77வது இடத்திலும், ஆர்யா 80வது இடத்திலும், பிரபுதேவா 88வது இடத்திலும் உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications